0
1
0
1
2
3
4
5
6
7
8
9
0
0
1
2
3
4
5
6
7
8
9
%

global privacy policy (tamil)

கடைசியாக இற்றையாக்கப்பட்டது: January 21, 2022

Select language

உலகளாவிய தரவு மற்றும் தொழில்நுட்ப வியாபாரமாக காணப்படும் Choreograph தரவுகளை இலக்காக கொண்ட (Data Driven) பல்வேறு வகையான சந்தைப்படுத்தல் தீர்மானங்களை வாடிக்கையாளர்களுக்கு அவர்களது சேவைகளுக்கும், தயாரிப்புக்களுக்கும் வழங்குகின்றது. நாம் ஒரு WPP கம்பனியாக உள்ளோம் அத்துடன் WPP வலையமைப்பில் உள்ள ஏனைய கம்பனிகளுடனும் நெருக்கமாக இணைந்து பணியாற்றுகின்றோம். இக்கம்பனிகளில் GroupM மற்றும் அதன் முகவர் அமைப்புகள் அத்துடன் GroupM Nexus மற்றும் Resolve Aps போன்ற விசேடத்துவம் மிக்க வர்த்தகங்களும் உள்ளடங்குகின்றன. மேலும் GroupM இன் தொழில்நுட்பங்கள் மற்றும் உற்பத்திகளையும் நாம் பயன்படுத்துகின்றோம். WPP பற்றிய மேலதிக தகவல்களைப் பெற இங்கே அழுத்தவும் அத்துடன் GroupM பற்றி அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.

நுகர்வோர்களாக இருக்கும் உங்களுக்கு, நாங்கள் எந்த வகையில் உங்களது தனிப்பட்ட தகவல்களை (சில இடங்களில் ”தனிப்பட்ட தரவு” அல்லது ”தனிப்பட்ட முறையில் அடையாளம் காண்பதற்கான தகவல்” எனக் குறிப்பிடப்படுவது) சேகரிக்கின்றோம் மற்றும் கையாள்கின்றோம் என்பது தொடர்பிலான தகவல்களை வழங்குவது இந்த தனியுரிமைக் கொள்கையின் பிரதான நோக்கமாக காணப்படுகின்றது. இது எமது நுகர்வோர் முன்னுரிமை வலைவாசலில் விளக்கப்பட்டவாறான, இணைய வழி மற்றும் இணையமற்ற வழி ஆகிய இரு வகையான தனிப்பட்ட தகவல்களையும் உள்ளடக்குகின்றது .

இது உலகளாவிய தனியுரிமைக் கொள்கையாகும். நீங்கள் இக்கொள்கையை ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) இருந்து அணுகினால், ஐக்கிய இராச்சியம் (UK), ஐரோப்பிய பொருளாதாரப் பிரதேசம் (EEA) மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள தனிநபர்களின் தனியுரிமை உரிமைகள் பற்றிய பிரிவையும் தயவு செய்து வாசிக்கவும். நீங்கள் ஒரு கலிபோர்னிய வசிப்பவர் எனில், கலிபோர்னியாவில் உள்ள தனிநபர்களின் தனியுரிமை உரிமைகள் பற்றிய பிரிவையும் தயவு செய்து வாசிக்கவும்.

ஏனைய தனியுரிமைக் கொள்கைகள்

இந்த தனியுரிமைக் கொள்கையானது, ே www.choreograph.com இணையதளத்தினை பயன்படுத்தும் போது சேகரிக்கப்படும் தனிப்பட்ட தகவல்களை உள்ளடக்குவதில்லை. இந்தத் தகவல் இங்கே பெறப்பட முடியும்.

ஆட்சேர்ப்பு தொடர் செயன்முறையின் போது உங்களின் தனிப்பட்ட தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என நீங்கள் அறிய விரும்பினால், ஆட்சேர்ப்பு தனியுரிமைக் கொள்கையினை இங்கே உங்களால் காண முடியும்.

முழு தனியுரிமைக் கொள்கையையும் வாசிக்குமாறு நாம் உங்களை ஊக்குவிக்கின்றோம், ஆயினும் நீங்கள் கீழே உள்ள உள்ளடக்க தொடுப்புகளைப் பயன்படுத்த விரும்பினால், இவை தனித்தனிப் பிரிவுகளுக்கு உங்களை இட்டுச் செல்லும்:

எமது சேவைகள்

இப்பிரிவு நாம் எமது சேவை பெறுநர்களுக்கு வழங்கும் சேவைகளைப் பற்றிய தகவல்களை வழங்குகின்றது. எமது "சேவை பெறுநர்கள்" நுகர்வோருடன் நேரடியாகக் கொடுக்கல் வாங்கல் செய்யும் நுகர்வோருக்குத் தமது தயாரிப்புகளையும் சேவைகளையும் விற்பனைசெய்யும் விளம்பரதாரர்களான வணிகங்கள் ஆகும். நாம் நுகர்வோருக்கு எமது சேவைகளை நேரடியாக வழங்குவதில்லை. நாம் நேரடியாக சேவை பெறுநர்களுடன் அல்லது சேவை பெறுநர்களின் சார்பாகச் செயற்படும் ஒரு முகவர் (ஒரு தரவை அல்லது ஊடகத்தை வாங்கும் முகவர் போன்றவை) மூலம் வேலை செய்கின்றோம்.

எமது சேவை பெறுநர்கள் பயனுள்ள, பொருத்தமான விளம்பரங்களை இணையவழியிலும் இணையமில் வழியிலும் நுகர்வோருக்கு வழங்க உதவுவதற்காக எமது சேவைகளைப் பயன்படுத்துகின்றனர். நாம் விளம்பரதாரர்கள் தமது தற்போதைய வாடிக்கையாளர்களின் ஆர்வங்களையும் விருப்பங்களையும் தேவைகளையும் விளங்கிக் கொள்ளவும் எல்லா ஊடக அலைவரிசைகளிலும் புதிய வாடிக்கையாளர்களைக் கண்டறியவும் உதவுகின்றோம். எமது சேவைகள் சேவை பெறுநர்களுக்கு தமது தற்போதைய, வருங்கால வாடிக்கையாளர்களைப் பற்றிய ஒருங்கிணைந்த, முழுமையான பார்வையை வழங்கி அவர்களுக்கு அவர்களது தயாரிப்புகளிலும் சேவைகளிலும் அதிக ஆர்வமுள்ள நுகர்வோருக்கு விளம்பரங்களை வழங்க இடமளிக்கின்றன.

எமது "சேவைகள்" மூன்று வகை நடவடிக்கைகளில் பரந்த அளவில் வரையறுக்கப்படலாம்: கீழே மேலும் விபரிக்கப்பட்டுள்ளவாறு ஒத்திசைத்தலும் தொகுத்தலும் வினையாற்றுதலும் காணப்படுகின்றன.

ஒத்திசைவு தொகுத்தல் நிகழ்த்துதல்
தரவு மேலேற்றல் தரவுச் செறிவூட்டல் திட்டமிடல்
தரவுத் துப்புரவு உள்ளார்ந்த பார்வை செயற்படுத்துதல்
தரவுப் பொருத்தம் மாதிரியாக்கம் தேர்வுமுறை விரிவாக்கம்
அடையாள அட்டையின் பிரிதிறன் துண்டமாக்கல் அளவிடுதலும் அறிக்கையிடுதலும்
விபரக்குறிப்பாக்கல்
உருவகப்படுத்துதல்

மேலே பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு சேவையினதும் விபரிப்புகளைப் பெற, தொடர் செயன்முறையாக்கத்தின் நோக்கங்கள் பிரிவை தயவு செய்து நோக்கவும்.

எமது தொழில்நுட்பங்களும் உற்பத்திகளும்

நாம் எமது சேவைகளை வழங்கப் பயன்படுத்தும் தயாரிப்புகளினதும் தொழினுட்பங்களினதும் ஒரு மேலெழுந்த பார்வை கீழே உள்ளது.

சேவையின் பெயர் சேவை விபரம்
அடையாள வரைபு அடையாள வரைபு ஆட்களுக்கும் இடங்களுக்கும் செயல்களுக்கும் இடையே உள்ள தொடர்புகளையும் உறவுகளையும் கண்டறிய வரைபுத் தொழினுட்பங்களையும் இயந்திரக் கற்றலையும் பயன்படுத்துகிறது. அது (சனத்தொகை, உளவியற் பண்புகள், ஆர்வங்கள், கொள்வனவு நடத்தைகள், சுகாதார நுண்ணறிவு போன்ற) ஒரு நுகர்வோரை அல்லது வீட்டாரைப் பற்றிய விரிவான பண்புக்கூறுகளை வழங்க, 1 ஆம் 3 ஆம் தரப்பு தரவுச் சொத்துக்களை இணைப்பதன் மூலம் ஒரு நுகர்வோரின் அடையாளத்தின் ஒரு முழுமையான பார்வையை வழங்குகிறது. அது Choreograph இற்கு தரவுப் பொருத்தம், அடையாள அட்டைப் பிரிதிறன், நுகர்வோர் நுண்ணறிவு, செறிவூட்டல், மாதிரியாக்கல், பிரித்தற் சேவைகள் என்பவற்றை வழங்க வழி செய்கிறது.
அடையாள வரைபு வலையமைப்பு (IDN) அடையாள வரைபு வலையமைப்பு என்பது அடையாள வரைபின் அடித்தளமாகும். அது சேவை பெறுநர் முதலாம் தரப்புத் தரவுகளும் மூன்றாம் தரப்பு அனுமதிப் பத்திரம் பெற்ற தரவுகளும் கீழே மேலும் விபரிக்கப்பட்டுள்ளவாறு Choreograph இன் தனியுரிமையான தரவுச் சொத்துக்களும் உட்பட வரைபுக்கு ஊட்டமளிக்கும் பல்வேறு தரவுச் சொத்துகளைக் குறிக்கிறது: அவையோர் தோற்றம்; i-Behaviour (ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம்), Conexance (பிரான்ஸ்), AmeriLINK (ஐக்கிய அமெரிக்கா), அத்துடன் mPlatform (உலகம் முழுவதும்).
அவையோர் தோற்றம் பார்வையாளர் தோற்றம் (Audience Origin) எனப்படுவது காலாண்டுக்கான எமது நுகர்வோர் கருத்துக் கணிப்பாக (Consumer Survey) காணப்படுகின்றது, அத்துடன் இந்த கருத்துக் கணிப்பானது உலகளாவிய ரீதியில் உள்ள எமது நம்பிக்கைமிக்க வளவாளர்களின் மூலம் நடத்தப்படுகின்றது. நுகர்வோரின் ஊக்கங்கள், நடத்தைகள் மற்றும் மனப்பாங்குகள் பற்றி சிறப்பாகப் புரிந்து கொள்வதற்காக அவர்களின் ஊடக நடத்தை, கொள்வனவு வகைகள், ஊடக தொடுகைப் புள்ளிகள், உளநிலை எழுத்துச் சார்நிலை மற்றும் மக்கள் தொகையியல் பற்றிய பல சிறப்பான கேள்விகளை நாம் நுகர்வோரிடம் கேட்போம். பொதுவான நுகர்வோர் மனப்பாங்குகள், அதே போன்று ஊடக திட்டமிடல் மற்றும் கொள்வனவு நோக்கங்களைப் புரிந்து கொள்ள தகவல் சேகரிப்பின் பதில்கள் ஒன்றாக இணைக்கப்படும் (அல்லது ஒன்று சேர்க்கப்படும்). சில சந்தர்ப்பங்களில், மாதிரியாக்கத்துக்கு பயன்படுத்துவதற்காக நாம் தனிநபர் பதில் வழங்குநர் மட்ட தரவுகளையும் பெற்றுக் கொள்கின்றோம்.
இணைவு இணைவு அவையோரின் தோற்றவிடத்திலிருந்து சேகரிக்கப்படும் கருத்துக் கணிப்புத் தரவுகளையும் mPlatform இலும் ஏனைய அனுமதிப் பத்திரம் பெற்ற மூன்றாம் தரப்புத் தரவு மூலங்களிலிருந்தும் பெறும் தரவுகளையும் பயன்படுத்தி, எமது சேவை பெறுநர்களுக்கு தரவுச் செறிவூட்டல், தரவுப் பொருத்தச் சேவைகளை வழங்க AI தொழினுட்பங்களைப் பயன்படுத்துகிறது.
தந்துரோபாய உருவகி எமது தந்துரோபாய உருவகி அவையோரின் தோற்றவிடத்திலிருந்து பெறப்படும் கணக்கெடுப்புத் தரவுகளைலிருந்து செயற்கைச் சனத்தொகைகளைப் பயன்படுத்தி, சேவை பெறுநர்களின் வணிகத்தில் நுகர்வோர் நடத்தையிலும் சந்தை இயங்கியலிலுமான மாற்றங்களின் தாக்கங்களை உருவகப்படுத்த அல்லது அனுமானிக்க உதவுகிறது. இது எமது சேவை பெறுநர்களுக்கு அவர்களின் ஊடக கொள்வனவை ஒரு முன்னோக்கிச் சிந்திக்கும் வழியில் திட்டமிட உதவுகிறது.
Conexance (பிரான்ஸ்)
iBehavior (ஐக்கிய இராச்சியம்)
Choreograph பிரான்ஸ் (முன்னதாக Conexance மற்றும் iBehavior என அறியப்பட்டது) என்பது பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுக்கான கூட்டுறவு மிக்க தரவுத்தளமாகும்.

GDPR சட்டத்தின் கீழ் முழுமையாக தனது உறுப்பினர்களின் கோரிக்கை மற்றும் அவர்களின் சார்பாக தரவு செயன்முறையாக்கியாக செயற்படும் Choreograph நிறுவனம் பின்வரும் சேவைகளை வழங்குவதற்காக தனிப்பட்ட தரவுகளை தொடர் செயன்முறையாக்கம் செய்கின்றது: மாதிரியாக்க சேவைகள் (புதிய வாடிக்கையாளர்களின் கண்ணோட்டங்களைக் கண்டறிவதற்காக), சேவைகள் மீள செயற்படுத்தல் மற்றும் மேம்படுத்தல் (சேவையில் இருந்து நீங்கிய வாடிக்கையாளர்களை மீள இணைக்க), அத்துடன் தரவு செறிவூட்டல் (ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்கள் கோப்புக்களில் உள்ள தரவு மாறிகளை இணைப்பதன் மூலம்). உறுப்பினர்கள் தபால், மின்னஞ்சல், SMS அல்லது நிகழ்நிலை மூலம் சந்தைப்படுத்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்க இது உதவுகின்றது.

Choreograph பிரான்ஸ் அதன் கூட்டுறவு வியாபாரத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளும் தனிப்பட்ட தரவு செயலாக்க செயற்பாடுகள் குறித்து மேலதிக தகவல்களை அறிந்து கொள்வதற்கு இங்கே செல்க:

AmeriLINK
(ஐக்கிய அமெரிக்கா)
AmeriLINK என்பது அமெரிக்காவில் உள்ள சனத்தொகையியல், உளவியல் வரைவுத் தரவுகள், சுகாதாரமும் நல்வாழ்வும் தொடர்பான தரவுகள், வாழ்க்கை நிகழ்வுகளின் தரவுகள், கொடுக்கல் வாங்கல்/கொள்வனவுத் தரவுகள், உளப்பாங்குத் தரவுகள், நிதிக் குறிகாட்டிகள் என்பன உட்பட நுகர்வோரையும் குடும்பங்களையும் பற்றிய தகவல்களை சேகரித்து, சேமித்து, ஒழுங்கமைக்கும் எமது தனியுடைமையான நுகர்வோர் தரவுத்தளமாகும். Choreograph எமது நுகர்வோர் தரவுத்தளத்தைப் பயன்படுத்தி AmeriLINK இன் சேவை பெறுநர்களுக்கு ஒத்துத் தோன்றும் மாதிரியாக்கல், தரவுச் செறிவூட்டற் சேவைகள் (வாடிக்கையாளரின் தற்போதைய சேவை பெறுநர் கோப்பில் தரவு மாறிகளைச் சேர்ப்பது), தரவுத் துப்புரவாக்கற் சேவைகள் (முகவரி தரப்படுத்தல், அடக்குதல் போன்றவை), பட்டியல் வாடகைச் சேவைகள் என்பன உட்பட மாதிரியாக்கற் சேவைகளை வழங்குகிறது.

 

நாம் கலிபோர்னியாவிலும் வெர்மொன்டிலும் ஒரு தரவுத் தரகராகப் பதிவு செய்யப்பட்டுள்ளோம்.

AmeriLINK செயற்படுத்தல் செயற்படுத்தல் என்பது Choreograph செயற்படுத்தல் அலைவரிசைகளில் ஒன்றாகும். சேவை பெறுநர்கள் சேவை பெறுநர்கள் தமது முதலாம் தரப்புத் தரவுகளை தளமேடையிற் பதிவேற்றவும், மேலதிக மூன்றாம் தரப்பு அனுமதிப் பத்திரம் பெற்ற, சொத்துரிமைத் தரவுகளை அணுகவும், இணையவழியிற் செயற்படுத்துவதற்காக அவையோரை DSP இற்கும் சமூக அலைவரிசைகளுக்குள் தள்ளவும் வழி செய்யும் வகையில் சுய சேவை அல்லது நிர்வகிக்கப்பட்ட சேவையில் செயற்படுத்தலைப் பயன்படுத்தலாம்.
mPlatform [m]PLATFORM என்பது ஒரு அவையோர் நுண்ணறிவுத் தீர்வாகும், இது பாரிய அளவில் தனிப்பயனாக்கம் செய்யப்பட்ட நுகர்வோர் உறவுகளைக் கட்டியெழுப்புகின்றது. அது Choreograph இற்கு நுகர்வோரின் ஆர்வங்களையும் தெரிவுகளையும் வாழ்க்கை முறைகளையும் பற்றிய நுண்ணறிவுகளைப் பெறுவதற்கும் நுகர்வோர் விபரக்குறிப்புகளை உருவாக்குவதற்கும் வழி செய்வதற்காக ஊடக நுகர்வு நடத்தை பற்றிய தரவுகளைச் சேகரிக்கிறது. நாம் எமது சேவை பெறுனர்களுக்கு நுகர்வோர் பற்றிய ஆழ்ந்த நோக்குகள், அதே போன்று மாதிரியாக்கம் (அதே போன்று தோன்றும் மாதிரியாக்கம் உள்ளடங்கலாக) என்பவற்றை வழங்க நாம் இக்கருவியை பயன்படுத்துகின்றோம். mPlatform செயற்பாட்டை தொடக்கி வைக்கும் ஒரு இயங்குதளமாகவும் காணப்படுகின்றது, இது செயற்பாட்டை தொடக்க DSP ஐ நோக்கி வாடிக்கையாளர்களை நாம் தள்ளுவதை அனுமதிக்கின்றது. mPlatform பற்றிய மேலதிக தகவல்களுக்கு இங்கே நோக்கவும்.
புரோட்டியசு புரோட்டியேசு வாங்கும் அளவீட்டில் காணப்படும் ஊடக நிகழ்ச்சி தரவுகளை செயலாக்கம் செய்கின்றது. எமது அனைத்து முகவர் அமைப்புகள் அனைத்தினதும் நிரலாக்க செயற்பாட்டில் உள்ள பதிவு மட்ட தரவுகளை உள்வாங்குதல் மற்றும் இயல்பாக்கம் செய்யும் செயற்பாடுகளை அது மேற்கொள்கின்றது, இச்செயற்பாடுகள் பின்வரும் சேவைகளை நாம் எமது சேவைநாடிகளுக்கு வழங்குவதற்கு எம்மை அனுமதிக்கின்றது: மாதிரியாக்கல், ஆழ்ந்த அறிவு, ஊடக திட்டமிடல் அத்துடன் பிரச்சார அறிக்கையிடல்.
Geograph ஜியோகிராப் புவியியல் அடிப்படையிலான வரைபடமாக இருந்து, இருப்பிடத் தரவு மற்றும் ஏனைய தரவுகள் என்பவற்றை உள்ளடக்கி, நுகர்வோர் வசிக்கும் அல்லது பார்வையிடுகின்ற இடங்களை காட்சிப்படுத்துவதற்கு உதவுகின்றது. இந்த தரவுப் புள்ளிகளினுடைய இணைப்பின் மூலம் பெறப்படும் படமானது பகுப்பாய்வு, உள்நோக்கு (Insight), திட்டமிடல், மேம்படுத்தல் மற்றும் இருப்பிடத்தை இலக்காக கொண்ட இலக்குகளுக்குப் பயன்படுகின்றது.
Choreograph Create கொரியோகிராப் கிரியேட் எனப்படுவது அறிவுத்திறன் மிக்க செயல்தளமாக (Platform) இருப்பதோடு, விளம்பரம் செய்வதற்கான மேம்படுத்தப்பட்ட வசதிகளையும் (Dynamic Creative Optimisation) வழங்குகின்றது. சேவைநாடிகள் பிரத்தியேகமாக்கப்பட்ட விளம்பர உள்ளடக்கங்களை வடிவமைக்கவும் கட்டமைக்கவும் முடிவதோடு சிறப்பான விளம்பர செயல்திறனை முன்கொண்டு செல்லும் கூறுகளை புரிந்து கொள்வதற்காக, விளம்பர கால இடைவெளி மட்டுப்பாடுகளுக்கான தொடர்புத் தருணங்களை அளவிடல் மற்றும் நுகர்வோர் பயணத்தை அடையாளம் காணல் உள்ளடங்கலாக பிரச்சாரத்தின் செயற்பாட்டினை அளவீடு மற்றும் பகுப்பாய்வு செய்கின்றது.

 

நாம் சேகரிக்கும் தகவல்கள்

எமது சேவைகளை வழங்கும் போது நாம் தனிப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய பல்வேறு தகவல்களைச் சேகரித்துப் பயன்படுத்துகிறோம்:

அடையாளம் காண்போர் ("IDs")

  • முழுப் பெயர், கைப்பேசி இலக்கம், தொலைபேசி இலக்கம் உட்பட இணையமில் வழி அடையாளங்கள்;
  • மின்னஞ்சல் முகவரி, IP முகவரி, ஞாபகி அடையாளங்கள், கைப்பேசி விளம்பர அடையாளங்கள் (MAIDகள்) உட்பட Apple இன் "IDFA" உம் Google இன் விளம்பரப்படுத்தல் அடையாளமும் போன்ற சாதன அடையாளங்கள் உட்பட இணையவழி அடையாளங்கள்;
  • "K-LINK", "ChoreoID", "[mP]ID" என்பன உட்பட அதன் சொந்த அடையாளச் சூழலில் நுகர்வோரைத் தனித்துவமாக அடையாளம் காணும் Choreograph இன் தனியுரிமை அடையாளங்கள்; அத்துடன்
  • கருத்துக்கணிப்பு அல்லது கருத்துக்கணிப்புக்குப் பதிலளிக்கும் நுகர்வோரின் சபை அடையாளங்கள் அல்லது மூன்றாம் தரப்பு மேலேற்றற் பங்காளர்களிடமிருந்து பெறும் அடையாளங்கள் என்பன உட்பட நாம் மூன்றாம் தரப்பினரிடமிருந்து பெறக்கூடிய ஏனைய அடையாளங்கள்.

உற்பத்தி வகை (உதாரணம்., நகைகள், ஆடைகள், செல்லப் பிராணிகள், பயணம், விளையாட்டு) மற்றும் கொள்வனவு விபரங்கள் (உதாரணம்., ஆர்டர்களின் எண்ணிக்கை, செலவழிக்கப்பட்ட பெறுமதி, கொடுப்பனவு வகை, கொள்வனவு முறைமை) உள்ளடங்கலாக கொடுக்கல் வாங்கள் மற்றும் கொள்வனவுத் தரவுகள். நாம் வங்கி விபரங்களை, கடனட்டை விபரங்களை அல்லது ஏனைய நிதிக் கணக்கு மட்ட விபரங்களைச் சேகரிப்பதில்லை. நாம் ஒரு குறிப்பான வணிகப் பெயரை அல்லது தயாரிப்பை வாங்குவதற்கான நுகர்வோரின் சாத்தியக்கூறை அல்லது "சார்பைப்" பற்றிய மாதிரியான கொடுக்கல் வாங்கல் தரவுகளையும் பயன்படுத்துகிறோம்.

இணைய உலாவியின் வகை மற்றும் பதிப்பு, இணைய உலாவியின் மொழி, இயக்க முறைமை அத்துடன் இணைப்பின் வகை (உதாரணம்., கம்பி மூல இணைப்பு, வைஃபை) உள்ளடங்கலாக கருவி மற்றும் இணைய உலாவி பற்றிய தகவல்கள்.

பக்கத்தின் URL (அல்லது பக்கத்தின் URL வகை), விளம்பரம் ஒன்றை பார்க்கும் முன்னர் நுகர்வோர் ஒருவர் இருந்த தளம்/பக்கம், இணைய செயற்பாட்டின் திகதி மற்றும் நேரம், ஒரு தளத்துக்கு வருகை தரும் கால இடைவெளி, தளம் ஒன்றில் பயன்படுத்தப்பட்ட தேடல் பதம், அத்துடன் விளம்பரம் ஒன்றுடன் மேற்கொள்ளப்பட்ட ஊடாடல் (உதாரணமாக., நீங்கள் விளம்பரம் ஒன்றை கிளிக் செய்கின்றீர்களா இல்லையா) அதே போன்று விளம்பரத்தின் உள்ளடக்கங்கள், விளம்பரதாரர் அல்லது வெளியீட்டாளர் தளம் ஒன்றின் உள்ளடக்கத்துடன் மேற்கொள்ளப்படும் ஊடாடல், "உற்பத்தி அடையாளம்" என சேமிக்கப்பட்டுள்ள தகவல்கள் உள்ளடங்கலாக இணைய செயற்பாட்டுத் தகவல்கள்.

வயது, பால்நிலை, வருமானம், திருமண நிலை, குடும்ப நிலை, கல்வி உள்ளடங்கலாக சனதொகைப் பிரிவுத் தகவல்கள்.

விருப்பு, வாழ்க்கைப் பாணிகள், மனப்பாங்குகள் மற்றும் ஆளுமைகள் உள்ளடங்கலாக உளவியல் அமைப்பு தகவல்கள்.

அஞ்சல் முகவரிகள், IP முகவரிகள் (அவை நாடு, பிராந்தியம், அல்லது தபால் குறியீடு/zip குறியீடு மட்ட அமைவிடத் தரவுகளாக மாற்றியமைக்கப்படும்) அத்துடன் சொத்துக்கள்/வீடுகளின் அகலாங்கு/நெட்டாங்கு (ஐக்கிய அமெரிக்காவில் உள்ளவை) உள்ளடங்கலாக அமைவிடத் தரவுகள்.

பால்நிலை அடையாளம், பாலியல் நாட்டம், மாற்றுத்திறன், மதம், இனம், ஆரோக்கியத் தரவுகள் உள்ளடங்கலாக கூருணர்திறம் மிக்க தரவுகள் (கீழே நோக்கவும்). இலக்கு வைப்பதற்கு அல்லது மீள் இலக்கு வைப்பதற்கு கூருணர்திறன் மிக்க தரவுகளைப் பயன்படுத்துவதை Choreograph அனுமதிப்பதில்லை

சுகாதாரத் தரவுகள் தனிநபர் மட்டம் ஒன்றில் ஆரோக்கிய நிலைகள் அல்லது சிகிச்சைகள் பற்றிய தரவுகள்.  ஆரோக்கிய காப்புறுதி கொண்டு செல்லும் திறன் மற்றும் பொறுப்புக் கூறல் சட்டத்தினால் (HIPAA) ஒழுங்குபடுத்தப்படும் "பாதுகாக்கப்பட்ட ஆரோக்கியத் தகவல்கள்" எவற்றையும் எமது ஆரோக்கியத் தரவுகள் உள்ளடக்குவதில்லை.

சேவைகள் வழங்கப்படுகின்ற பகுதிகளில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள எல்லாத் தகவல்களும் சேகரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுவதில்லை. உங்களைப் பற்றி நாம் என்ன தனிப்பட்ட தகவலைக் கொண்டுள்ளோம் என்பதை நீங்கள் அறிய விரும்பினால், தயவு செய்து எமது நுகர்வோர் முன்னுரிமை வலைவாசலை பயன்படுத்தவும்.

நாம் இத்தகவலகளைப் பயன்படுத்தும் முறை

கீழே உள்ள இந்த அட்டவணை எங்கள் சேவைகளை வழங்கும்போது பல்வேறு வகையான தகவல்களைப் பயன்படுத்துவதற்கான நோக்கங்களை விபரிக்கின்றது. இந்த நோக்கங்கள் ஒவ்வொன்றினதும் விபரிப்புகளைப் பெற, தொடர் செயன்முறையாக்கத்தின் நோக்கங்கள் பிரிவில் மேலதிக விபரங்களை நோக்கவும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்கு மேலதிகமாக, நாம் மோசடியைக் கண்டறியவும் அல்லது தடுக்கவும், எமது சட்டபூர்வ உரிமைகளைப் பாதுகாக்கவும் சட்டத்துக்குக் கீழ்ப்படியவும், நாம் சேகரிக்கும் எல்லாத் தகவல்களையும் அல்லது அவற்றின் ஒரு சேர்க்கையையும் பயன்படுத்தலாம்.

ஒத்திசைவு

தகவல் வகை நாம் இத்தகவலகளைப் பயன்படுத்தும் முறை
தரவு மேலேற்றல் தரவுத் துப்புரவு தரவுப் பொருத்தம் அடையாள அட்டையின் பிரிதிறன்
முழுப் பெயர் அஞ்சல் முகவரி மின்னஞ்சல் முகவரி தொலைபேசி இலக்கம்
IP முகவரி, ஞாபகி அடையாளம், MAID, சாதன அடையாளம் என்பன உட்பட இணையவழி அடையாளங்கள்
கருத்துக் கணிப்பு அல்லது அவையடையாளம் ✓ (அடக்குதல்)
கருத்துக் கணிப்புப் பதில்கள்
கொள்வனவுத் தரவுகளும் கொடுக்கல் வாங்கல் தரவுகளும்
சாதனத் தகவல்களும் உலாவித் தகவல்களும்
இணையவழிச் செயற்பாட்டுத் தகவல்கள்
அமைவிடத் தகவல்கள்
உணர்திறன்மிக்க தரவு

தொகுத்தல்

தகவல் வகை நாம் இத்தகவலகளைப் பயன்படுத்தும் முறை
தரவுச் செறிவூட்டல் உள்ளார்ந்த பார்வை மாதிரியாக்கம் துண்டமாக்கல் விபரக்குறிப்பாக்கல் உருவகப்படுத்துதல்
முழுப் பெயர் அஞ்சல் முகவரி மின்னஞ்சல் முகவரி தொலைபேசி இலக்கம்
IP முகவரி, ஞாபகி அடையாளம், MAID, சாதன அடையாளம் என்பன உட்பட இணையவழி அடையாளங்கள்
கருத்துக் கணிப்பு அல்லது அவையடையாளம்
கருத்துக் கணிப்புப் பதில்கள்
கொள்வனவுத் தரவுகளும் கொடுக்கல் வாங்கல் தரவுகளும்
சாதனத் தகவல்களும் உலாவித் தகவல்களும்
இணையவழிச் செயற்பாட்டுத் தகவல்கள்
அமைவிடத் தகவல்கள்
உணர்திறன்மிக்க தரவு  ✗  ✗  ✗

நிகழ்த்துதல்

தகவல் வகை நாம் இத்தகவலகளைப் பயன்படுத்தும் முறை
திட்டமிடல் செயற்படுத்துதல் தேர்வுமுறை விரிவாக்கம் அளவிடுதலும் அறிக்கையிடுதலும்
முழுப் பெயர் அஞ்சல் முகவரி மின்னஞ்சல் முகவரி தொலைபேசி இலக்கம்
IP முகவரி, ஞாபகி அடையாளம், MAID, சாதன அடையாளம் என்பன உட்பட இணையவழி அடையாளங்கள்
கருத்துக் கணிப்பு அல்லது அவையடையாளம்
கருத்துக் கணிப்புப் பதில்கள்
கொள்வனவுத் தரவுகளும் கொடுக்கல் வாங்கல் தரவுகளும்
சாதனத் தகவல்களும் உலாவித் தகவல்களும்
இணையவழிச் செயற்பாட்டுத் தகவல்கள்
அமைவிடத் தகவல்கள்
உணர்திறன்மிக்க தரவு  ✗  ✗

 

செயலாக்க நோக்கங்கள்

சேவைகள் செயலாக்க நோக்கங்கள் நோக்கங்களின் விளக்கம்
ஒத்திசைவு தரவு மேலேற்றல் சேவை பெறுநரின் தரவுகளை Choreograph இன் தரவுச் சூழலுக்கு அல்லது மூன்றாம் தரப்பினால் ஓம்பப்படும் தூயவறைச் சூழலுக்குக் கொண்டு வருதல். மூன்றாம் தரப்பு அனுமதிப் பத்திரம் பெற்ற தரவுகளை Choreograph இன் தொழினுட்பத் தளமேடைகளுக்குக் கொண்டு வருதல்.
தரவுத் துப்புரவு ஒன்றிணைத்தல்/சுத்திகரிப்பு, முகவரி தரப்படுத்தல், அடக்குதல் என்பன உட்பட சேவை பெறுநர் தரவுகளைத் துப்புரவாக்குதல்.
தரவுப் பொருத்தம் Choreograph தனியுடைமைத் தரவுத்தளத்தில் வைத்திருக்கும் நுகர்வோருடன் சேவை பெறுநரின் தரவுகளைப் பொருத்துதல். உமது இணையவழிச் செயற்பாட்டுடன் அல்லது இணையவழி அடையாளங்களுடன் (உதாரணமாக சாதன அடையாளம், ஞாபக அடையாளம் போன்றவற்றுடன்) இணையமில் வழித் தரவுகளைப் பொருத்துதல் (உதாரணமாக பெயர், தபால் முகவரி போன்றவற்றை) இணையவழித் தரவுகளுடன் இணையமில் வழித் தரவுகளைப் பொருத்துதல். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சாதனங்கள் ஒரே பயனரை அல்லது குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதைக் கண்டறிய வெவ்வேறு சாதனங்களைப் பொருத்துதல்
அடையாள அட்டையின் பிரிதிறன் அறியப்பட்ட, அறியப்படாத வாடிக்கையாளர்களில் ஒரு சேவை பெறுநருக்கு உரித்தான தனிச் சேவை பெறுநர் பார்வையை உருவாக்குதல். Choreograph இன் அந்தரங்க அடையாளம் உட்பட நுகர்வோருக்கு ஒரு தனிப்பட்ட அடையாளத்தை ஒதுக்குதல்.
தொகுத்தல் தரவுச் செறிவூட்டல் Choreograph இன் அந்தரங்கத் தரவுத்தளத்திலிருந்து நுகர்வோர் தரவுகளைச் சேர்ப்பதன் மூலம் (அல்லது இணைப்பதன் மூலம்) சேவை பெறுநரின் தரவுகளை மேம்படுத்துதல்
உள்ளார்ந்த பார்வை நுகர்வோரின் ஆர்வங்களையும் உந்துதல்களையும் நடத்தைகளையும் விருப்பங்களையும் விளங்கிக் கொள்ள அல்லது உள்ளார்ந்த பார்வையைப் பெற ஒரு தரவுத் தொகுப்பைப் பயன்படுத்துதல். இது ஒரு தனிப்பட்ட நுகர்வோர் மட்டத்தில் இருக்கலாம் அல்லது ஒரு மொத்தக் குழு அல்லது சனத்தொகை மட்டத்தில் இருக்கலாம்
மாதிரியாக்கம் நுகர்வோர் நடத்தைகளை முன்னறிவிக்கும் அல்லது நுகர்வோரைப் பற்றிய சாத்தியக்கூறுகளைக் குறிக்கும் மாதிரிகளை (அல்லது "விதித்" தொகுப்புகளை) உருவாக்குதல்.
துண்டமாக்கல் உண்மையான அல்லது ஊகிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஒரே அல்லது ஒத்த பண்புக்கூறுகளை, நிபந்தனைகளை, தேவைகளை அல்லது தெரிவுகளைப் பகிர்ந்து கொள்ளும் (சில நேரங்களில் துண்டங்கள், அவையோர் அல்லது பட்டியல்கள் எனப்படும்) நுகர்வோர் குழுக்களை உருவாக்குதல்.
விபரக்குறிப்பாக்கல் மாதிரியாக்கல், பிரித்தல், செயற்படுத்தல் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் நுகர்வோரின் பண்புகள், நடத்தைகள், அத்துடன்/அல்லது புள்ளிவிபரங்களின் அடிப்படையில் அடையாளச் சீட்டிடல் அல்லது விபரித்தல்.
உருவகப்படுத்துதல் சேவை பெறுநரின் தரவுகளையும் Choreograph தரவுகளையும் பயன்படுத்தி சனத்தொகை நடத்தையை உருவகப்படுத்துவதன் மூலம் சந்தைப்படுத்தலால் ஏற்படக்கூடிய விளைவுகளைச் சோதித்தல்.
நிகழ்த்துதல் திட்டமிடல் தன்னியக்கக் கருவிகளைப் பயன்படுத்துவது உட்பட எல்லா அலைவரிசைகளிலும் ஊடங்களை வாங்கத் திட்டமிடுதல்
செயற்படுத்துதல் இணையவழி விளம்பரத்துக்கான ஊடகக் கொள்வனவுக்கும் சமூகத் தளங்களுக்குமான அவையோரை வழங்குதல். இணையமில் வழி விளம்பரத்துக்காக (உதாரணமாக அஞ்சல், தொலைபேசி) சேவை பெறுநருக்கு அல்லது மூன்றாம் தரப்பு நிறைவேற்று நிறுவனங்களுக்கு பட்டியல்களை வழங்குதல்.
தேர்வுமுறை விரிவாக்கம் நுகர்வோரின் நலன்கள், அமைவிடம், மொழி, விருப்புகள் போன்ற விடயங்களின் அடிப்படையில் அவர்களுக்கு பொருத்தமான விளம்பரங்களை உருவாக்குதல்
ஏனைய தரவுகளுடன் (காலநிலைத் தகவல்கள், ஏற்கனவே பார்த்த உற்பத்திகள் போன்றன) விளம்பரங்களை உவப்பாக்குதல் (உண்மையான நேரங்கள் உள்ளடங்கலாக)
நுகர்வோர் அனுபவங்களை தனிப்பட்டனவாக்குவதற்கு விற்பனை/மீள் இலக்கு வைத்தலை மேற்கொள்ள முதல் தொடர்பில் இருந்து நுகர்வோர் பயணத்தை புரிந்து கொள்ளல்
அளவிடுதலும் அறிக்கையிடுதலும் விளம்பரப் பிரச்சாரத்தின் வினைத்திறனை அளவிடுதலும் முறைப்பாடு செய்தலும்

 

தகவல்களின் மூலங்கள்

நாம் பின்வருவன உட்படப் பல்வேறு மூலங்ங்களிலிருந்து தகவல்களைப் பெறுகிறோம்:

  • எங்களது வாடிக்கையாளர்கள், அதாவது எங்களது சேவைகளை பயன்படுத்துவதன் மூலம் அவர்களது தரவுகளை எங்களது தளங்களுக்கு வழங்கி, எங்களது இணையவழி கூக்கிகள் மற்றும் பிக்சல்கள் இனைப் பயன்படுத்தி, நுகர்வோரின் இணைய மற்றும் செயலி உடைமைகளில் இருந்து தரவு பெறுபவர்களாக இருக்க முடியும் நாம் பயன்படுத்தும் கூக்கிகள் பற்றி மேலதிகத் தகவல்களைப் பெற கூக்கிகள் பற்றிய பிரிவினை நோக்கவும்.
  • எமது தகவல் சேகரிப்புகளில் (அல்லது எமது மூன்றாம் தரப்பு பங்காளர்கள் நிருவகிக்கும் தகவல் சேகரிப்புகளில்) பங்கேற்க உடன்படும் நுகர்வோரிடம் இருந்து அத்துடன் கூக்கிகள், பிக்சல்கள் அல்லது அவற்றையொத்த வலை மற்றும் செயலியின் தன்மைகள் தொடர்பான இணைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நேரடியாக நுகர்வோரிடம் இருந்து,  நுகர்வோர் தகவல் சேகரிப்பின் ஊடாக மாத்திரமே நாம் கூருணர்திறன் மிக்க தரவுகளை சேகரிக்கின்றோம், அதில் நுகர்வோர் தன்னார்வமாக பங்கேற்கின்றனர் (அல்லது, இனம் பற்றிய தகவல்கள் விடயத்தில் அவை சனத்தொகையியல் அல்லது புவியியல் தகவல்களில் இருந்து மாதிரியாக்கம் செய்யப்படுகின்றன).   நாம் பயன்படுத்தும் கூக்கிகல் பற்றிய மேலதிகத் தகவல்களை அறிந்து கொள்ள, கூக்கிகள் பற்றிய எமது பிரிவை நோக்கவும்.
  • எமது வணிகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து. உதாரணமாக நாம் எமது கூட்டுறவு வணிகங்களின் (i-Behaviour மற்றும் Conexance) உறுப்பினர்களால் வழங்கப்பட்ட கொடுக்கல் வாங்கல் தகவல்களை எடுத்து, அத்தகவல்களைப் பொதுவான தயாரிப்பு வகைகளாக மாற்றுவோம், உதாரணமாக "பெண்கள் ஆடை," "அண்மைய நிலை," "கால இடைவெளி," "பணவியல்" அட்டவணைகள், பெண்களின் ஆடைகளுக்கான கடைசி கொள்வனவுத் திகதி, சென்ற 12 மாதங்களில் பெண்களுக்கான ஆடைகக் கொள்வனவுகளின் எண்ணிக்கை, செலவழிக்கப்பட்ட மொத்தத் தொகை, கடந்த 12 மாதங்களில் பெண்களின் ஆடைகளுக்கான சராசரிச் செலவின் பெறுமானம் போன்றவை.
  • தொழில் சார், பொழுதுபோக்கு அனுமதிப் பத்திரங்கள் (உதாரணமாக மீன்பிடி அனுமதிப் பத்திரங்கள்), அஞ்சல் பதிவுகள் (முகவரி தரப்படுத்தலுக்கு), அடக்குதற் பட்டியல்கள் (உதாரணமாக அழைக்கக் கூடாத பதிவுகள்), சனத்தொகைக் கணக்கெடுப்பு பதிவுகள் போன்றன குறிப்பான நாடுகளில் கிடைக்குமிடத்து பொதுப் பதிவுகளில் இருந்து.
  • எமது நம்பிக்கைக்குரிய மூன்றாம் தரப்புப் பங்காளர்களிடமிருந்து. இப்பங்காளர்களிற் சிலர் பல்வேறு மூலங்களிலிருந்து தரவுகளை ஒருங்கிணைக்கலாம்.

கூக்கிகள்

இந்தப் பிரிவானது நாங்கள் சேவைகள் வழங்கும் போது உபயோகம் செய்யும் கூக்கிகள் குறித்து விபரிக்கின்றது, இதற்குள் நடத்தை அடிப்படையிலான விளம்பரங்களில் இருக்கும் ஆர்வமும் அடங்கும். இதில் எமது சேவை பெறுநர்களின் இணையப் பண்புகளுக்கு அல்லது எணது சேவை பெறுநர்களின் விளம்பங்களிற் காட்டப்படும் பண்புகளுக்குச் செல்லும் போது உமது உலாவியில் வைக்கப்படும் ஞாபகிகள் அடங்குகின்றன. எமது குழும வலைத்தளத்தில் நாம் பயன்படுத்தும் கூக்கிகள் பற்றிய விடயங்களுக்கு தயவு செய்து எமது கூக்கிகள் பற்றிய கொள்கையை நோக்கவும்.

ஞாபகி என்பது ஒரு வலைத்தளத்தினால் அல்லது மூன்றாம் தரப்பு விளம்பரச் சேவையகத்தினால் அல்லது ஏனைய மூன்றாம் தரப்பினரால் உலாவியிற் சேமிக்கப்பட்டு அந்த வலைத்தளம் அல்லது மூன்றாம் தரப்பினர் அந்த உலாவியை அடையாளம் கண்டு பயனரைப் பற்றிய சில தகவல்களை நினைவில் வைத்துக் கொள்ள வழி செய்யும் ஒரு சிறிய எண்ணெழுத்து உரைக் கோப்பாகும். எங்களது இணையவழி கூக்கிகள் நிரந்தரமாக இருப்பதோடு (அதாவது இதன் அர்த்தம் அவை காலாவதியாகும் வரை அல்லது ஒரு பயனரால் நீக்கப்படும்/அகற்றப்படும் வரை சேமிக்கப்படுபவையாக இருக்கும்) தனித்துவமாக எழுமாறாக உருவாக்கப்பட்ட பெறுமானங்களைக் கொண்டிருக்கின்றது. அதாவது உலாவிகளையும் சாதனங்களையும் வேறுபடுத்துவதற்கு எமது சேவைகளைச் செயற்படுத்துவதற்கு ஒரு பயனரைப் பற்றிய குறித்த வித்தியாசமான தகவல்களை கொண்டுள்ளது. எங்களது இணையவழி கூக்கிகள், எங்களது சேவைகளின் செயல்திறனில் பயன்படுத்தப்படுகின்ற, ஆர்வத்தை அடிப்படையாக கொண்ட விளம்பரப்படுத்தலில் உபயோகம் செய்யப்படும் இந்த பயனர் தகவலுடன் உள்ளடக்கியதாக காணப்படும்.

கீழுள்ள இந்த அட்டவணை எங்களது இணையவழி கூக்கிகள் குறித்த தகவல்களை வழங்குகின்றது.

இணையவழி கூக்கி இன் பெயர் பெயர் (Domain) இணையவழி கூக்கி இன் வாழ்வுக்காலம் இணையவழி கூக்கி மீள் புதுப்பிக்கப்பட்டதா? இணையவழி கூக்கி இல் சேமிக்கப்பட்ட தகவல்கள் பயன்பாட்டு சந்தர்ப்பங்கள் Consent Framework மற்றும் IAB வெளிப்படைத்தன்மைக்கு ஏற்ப பதிவு செய்யப்பட்டதற்கான காரணங்கள்
id mookie1.com 395 நாட்கள் ஆம் உலகளாவிய வரிசை எண் செயற்பட வைத்தல்
உவப்பாக்குதல்
அறிக்கையிடல்
அளவீடு (இயற்பண்பு)
பாதுகாப்பு
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
ov mookie1.com 395 நாட்கள் ஆம் தனித்துவமான அடையாளங்காட்டி அறிக்கையிடல்
அளவீடு (இயற்பண்பு)
பாதுகாப்பு
1, 7, 8, 10
mdata mookie1.com 395 நாட்கள் ஆம் தனித்துவமான தொடர் இலக்கம்
நேர முத்திரை உருவாக்கம்
கூக்கியின் பதிப்பு
செயற்படுத்துதல் 1, 2, 3, 4, 5, 6, 10
syncdata_<PARTNER> mookie1.com 10 நாட்கள் ஆம் தனித்துவமான தொடர் இலக்கம்
நேர முத்திரை உருவாக்கம்
தரவுப் பங்காளரின் வருகை தருநர் அடையாளம்
தரவுப் பொருத்தம்
செயற்பட வைக்கப்படல்
1, 2, 3, 4, 5, 6, 10
ibkukiuno ib.mookie1.com 365 நாட்கள் ஆம் ஹாஷ் இடப்பட்ட மின்னஞ்சல்
அமர்வு அடையாளம்
Choreograph அடையாளம் ("Velo அடையாளம்" என அழைக்கப்படுகின்றது)
கூக்கி பயன்படுத்தப்பட்ட இறுதித் திகதி
ஆஃபர் பாத் அடையாளம்
Velo தோற்றவடிவ தேடல்
மின்னஞ்சல் ஹாஷ் தேடல் முறை
கூக்கி உருவாக்கப்பட்ட திகதி
கூக்கி பார்க்கப்பட்ட தடவைகளின் எண்ணிக்கை
பொருந்தப்படவில்லை (N/A)
ibkukinet ib.mookie1.com 365 நாட்கள் ஆம் IP முகவரி
திகதி
பொருந்தப்படவில்லை (N/A)
src0_xxxx d.lemonpi.io 30 நாட்கள் ஆம் விளம்பரதாரரின் இணையதளத்தில் நுகர்வோர் பார்வையிட்ட தயாரிப்புகளின் அடையாளம் தேர்வுமுறை விரிவாக்கம் பொருந்தப்படவில்லை (N/A)
lpc d.lemonpi.io 30 நாட்கள் ஆம் நேர முத்திரை
விளம்பரதாரர் ஒருவரின் பிரச்சாரத்துக்கான மாற்ற அடையாளம்
தேர்வுமுறை விரிவாக்கம், அறிக்கையாக்கம் பொருந்தப்படவில்லை (N/A)
lpuid Lemonpi.io 365 நாட்கள் ஆம் பிரேத்திய பயனர் அடையாளம் தரவுப் பொருத்தம் பொருந்தப்படவில்லை (N/A)
_ud Lemonpi.io 30 நாட்கள் ஆம் விளம்பரதாரரின் இணையதளத்தில் நுகர்வோர் பார்வையிட்ட, பாஸ்கெட்டில் வைத்த மற்றும் வாங்கிய பொருட்களின் அடையாளம் தேர்வுமுறை விரிவாக்கம் பொருந்தப்படவில்லை (N/A)

ஒரு செயலிச்சூழலில், (ஒரு ஞாபகிஅடையாளத்துக்குப் பதிலாக) உமது சாதனத்துக்கு ஒரு விளம்பர அடையாளம் ஒதுக்கப்படும். இது ஒரு தளமேடையினால் அல்லது இயங்குதளத்தினால் (Apple iOS அல்லது Google Android போன்றவவற்றால்) கிடைக்கக்கூடிய ஒரு எண்ணெழுத்து அடையாளங்காட்டியாவதுடன் செயலி ஆக்குநர்களையும் மூன்றாம் தரப்பினரையும் ஒரு குறிப்பான சாதனத்தையும் பயனருடன் தொடர்புள்ள சில தகவல்களையும் ஒரு செயலிச் சூழலில் அடையாளம் காண வழி செய்கிறது. Apple இன் "IDFA," Google இன் விளம்பரப்படுத்தல் அடையாளங்கள் போன்ற கைப்பேசி விளம்பர அடையாளங்கள் (MAIDகள்) விளம்பரப்படுத்தல் அடையாளங்களின் உதாரணங்களில் அடங்கும்.  ஒரு விளம்பரதாரர் அடையாளத்துடன் இணைந்த பயனர் தகவல்கள் விருப்பு அடிப்படையில் அமைந்த விளம்பரப்படுத்தல் உள்ளடங்கலாக எமது சேவைகளின் செயற்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றது.

நாம் தகவல்களை எவ்வாறு பகிர்கின்றோம்

எமது சேவைகள் வழங்கலில் தகவல்களைப் பகிர்தல்

சேவை பெறுனர்கள்: நாம் பகிர்தல், அனுமதிப் பத்திரம் வழங்குதல் அல்லது எமது சேவை பெறுநர்களுக்குத் தகவல்களை அணுக அனுமதித்தல் ஆகியவை அடங்கக்கூடியவாறு, இந்த அந்தரங்க அறிவிப்பில் விபரிக்கப்பட்டுள்ள தகவல்களை எமது சேவை பெறுநர்களுக்கு (அல்லது சேவை பெறுநர்களின் சார்பாகச் செயற்படும் முகவர்களுக்கு) சேவைகளை வழங்கப் பயன்படுத்துகிறோம். நாம் எமது கூட்டுறவுத் தரவுத்தளத்துக்கு (i-Behaviour உம் Conexance உம்) கூட்டுறவிலுள்ள பங்குபற்றும் உறுப்பினர்களுடனும், Choreograph வணிகத்தின் ஏனைய பகுதிகளுடனும் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறோம் (தகவல் மூலங்கள் எனும் பிரிவில் எமது வணிகத்தின் ஏனைய பகுதிகளிலிருந்து எவ்வாறு தகவல்களைப் பெறுகிறோம் என்பது விபரிக்கப்படுவதைக் நோக்குக).

உள்ளகக் குழு நிறுவனங்கள்: நாம் எமது குழு நிறுவனங்களான WPP உடனும் GroupM உடனும் Mindshare, MediaCom, Wavemaker, Essence, m/SIX, GroupM Nexus, GTB மற்றும் CMI போன்ற முகவர் அமைப்புகளுடனும் உள்ளகத்தில் தகவல்களைப் பகிர்கிறோம்.

சேவை வழங்குநர்கள்: நாம் எம் சார்பாக, அத்துடன்/அல்லது எமது சேவை பெறுநர்களின் சார்பாக விளம்பரப் பரிமாற்றங்களும் விளம்பரச் சேவையகங்களும், இணையமில் வழிச் சந்தைப்படுத்தல் பிரச்சாரங்களுக்கான நிறைவேற்று இல்லங்கள், தொழினுட்பம் அல்லது சேவை பெறுநர் ஆதரவில் ஈடுபட்டுள்ள வழங்குநர்கள், செயற்பாடுகள், வலை அல்லது தரவு ஓம்புதல்/சேமிப்பு, சிட்டையிடல், கணக்கியல், பாதுகாப்பு, சந்தைப்படுத்தல், தரவு முகாமைத்துவம், சரிபார்த்தல், மேம்பாடு அல்லது துப்புரவு, அல்லது வேறு விதமாக எமது சேவைகளையும் தயாரிப்புகளையும் வழங்க, விருத்தி செய்ய, பராமரிக்க, மேம்படுத்த உதவுதல் என்பன உட்பட சேவைகளையும் செயற்பாடுகளையும் செய்யும் மூன்றாம் தரப்பு வழங்குநர்களுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறோம்.

எனையவை: Choreograph Create இற்கு, நாம் புத்தாக்கம் மிக்க காணொளி உள்ளடக்கத்தை YouTube அல்லது YouTube API சேவைகள் மூலமாக வாடிக்கையாளர் நன்மைக்காக காட்சிப்படுத்தி பகிரலாம். YouTube சேவை விதிமுறைகளுக்கு& ;(https://www.youtube.com/t/terms),& ;தனியுரிமைக் கொள்கை& ;(http://www.google.com/policies/privacy)& ;YouTube API சேவையின் சேவை விதிமுறைகள்& ;(https://developers.google.com/youtube/terms/api-services-terms-of-service) இந்த சேவைகளுக்காக பொருந்துபவை. எந்தவொரு மூன்றாம் தரப்பு சேவைகளினதும் உள்ளடக்கங்கள் அல்லது தனியுரிமை செயற்பாடுகளுக்கும் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம். நீங்கள் பெறுகின்ற மூன்றாம் தரப்பு சேவைகளின் தனியுரிமைக் கொள்கைகள் தொடர்பில் மிகவும் கவனமாக மதிப்பீடு செய்யுமாறு நாங்கள் உங்களுக்கு ஆலோசனை வழங்குகின்றோம். YouTube API சேவைகளுக்கு உங்களும் இருக்கும் அனுமதியினை நீங்கள் Google இன் பாதுகாப்பு செட்டிங்குகள் பக்கத்தின் வாயிலாக உங்களால் இரத்துச் செய்ய முடியும்https://myaccount.google.com/permissions

சட்ட நோக்கங்களுக்காக தகவல்களை பகிர்தல்:

நாம் பின்வருவனவற்றுக்காகத் தனிப்பட்ட தகவல்களை (சட்ட நடைமுறைப்படுத்தல், கணக்காய்வாளர்கள், ஒழுங்குறுத்திகள் ஆகியோர் உட்பட) மூன்றாம் தரப்பினருடன் பகிர்ந்து கொள்ளலாம்:

  • சட்டச் செயன்முறைக்கு அல்லது ஒரு ஒழுங்குபடுத்தல் விசாரணைக்குக் கீழ்ப்படிதல் (உதாரணமாக ஒரு அழைப்பாணை அல்லது நீதிமன்ற உத்தரவு).
  • ஏற்படக்கூடிய மீறல்களைப் பற்றிய விசாரணை உட்பட எமது சேவை விதிமுறைகளை, இந்த தனியுரிமைக் கொள்கையை அல்லது உங்களுடன் உள்ள ஏனைய ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தல்.
  • ஏதேனும் உள்ளடக்கம் மூன்றாம் தரப்பினரின் உரிமைகளை மீறுவதாகக் கூறும் கோரிக்கைகளுக்குப் பதிலளித்தல்.
  • எம்முடையவும் எமது தளமேடையினதும் எமது சேவை பெறுநர்களினதும் எமது முகவர்களினதும் துணை நிறுவனங்களினதும், அவற்றின் பயனர்களினதும் அத்துடன்/அல்லது பொதுமக்களினதும் உரிமைகளை, சொத்துக்களை அல்லது தனிப்பட்ட பாதுகாப்பைக் காத்தல். மோசடிப் பாதுகாப்பு, எரித/தீநிரல் தடுப்பு, அவற்றையொத்த நோக்கங்கள் என்பற்றுக்காக நாம் (சட்ட நிறைவேற்றல் உட்பட) ஏனைய கம்பனிகளுக்கும் நிறுவனங்களுக்கும் தகவல்களை வழங்கலாம்.

குழும நோக்கங்களுக்காக தகவல்களை பகிர்தல்

கட்டுப்பாட்டு மாற்றத்துக்கு ஏற்பத் தரவு அனுப்புதல்: ஒருங்கிணைத்தல், இணைவு, சொத்துக் கொள்வனவு அல்லது வேறு கொடுக்கல் வாங்கலின் மூலம் வேறொரு நிறுவனம் எம்மைக் கையகப்படுத்தும் போது அல்லது எமது வணிகத்தின் எல்லா அல்லது கணிசமான அளவு சொத்துக்களையும் பெற்றால், ("எம்மைத் தொடர்பு கொள்க" எனும் பக்கத்தின் மூலம் நீர் வழங்கிய தகவல்கள் உட்பட) எம் வசம் அல்லது எமது கட்டுப்பாட்டிலுள்ள எல்லாத் தகவல்களையும் கையகப்படுத்தும் தரப்பினருக்குக் கைமாற்றும் உரிமையை நாம் தக்க வைத்துக் கொள்வதுடன் கையகப்படுத்தும் தரப்பு அத்தகவல்களை அதன் வணிகத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

குழும கொடுக்கல் வாங்கல் ஒன்றில் தகவல்களைப் பகிர்தல்: நாம் எடுத்துக்காட்டாக, இணைவு, முதலீடு, கையகப்படுத்தல், மறுசீரமைப்பு, ஒருங்கிணைப்பு, வங்குரோத்தாதல், கலைப்பு, அல்லது எமது சில அல்லது எல்லாச் சொத்துக்களினதும் விற்பனை, அல்லது அத்தகைய கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புள்ள உரிய பின்பற்றல் நோக்கங்களுக்காக என்பன உட்பட ஒரு பெரிய குழுமக் கொடுக்கல் வாங்கலின் போது தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம்.

தரவுப் பாதுகாப்பு

நுகர்வோரின் தனிப்பட்ட தகவலின் அந்தரங்கத்தைப் பேணுவது எமக்கு மிகவும் முக்கியமானது, அதாவது தரவு மீறல்களிலிருந்து இந்தத் தகவல்களைப் பாதுகாக்க நாம் எமது பாதுகாப்பு நடவடிக்கைகளிற் கவனம் செலுத்துகிறோம். நாம் தகவல்களை அங்கீகரிக்கப்படாத அணுகல், தக்க வைத்தல், வெளிப்படுத்துதல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கத் தொழிற்றுறைத் தரங்களைப் பின்பற்றுகிறோம். இதில் தகவல் ஒருமைப்பாட்டையும் அணுகலையும் பயன்பாட்டையும் பாதுகாப்பதற்கான பௌதிக, இலத்திரனியல், முகாமைத்துவச் செயற்பாடுகள் அடங்குகின்றன.

Choreograph ஒரு விரிவான தரவுக் காப்புத் திட்டத்தின் முக்கியத்துவத்தை அறிந்துணர்வதுடன் நாம் செயலாக்கும் தரவுகள் துல்லியமாகவும் பாதுகாப்பாகவும் பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டிய தேவையை அறிந்துணர்கிறது. நாம் வைத்திருக்கும் தகவல்களைப் பாதுகாக்க தொழினுட்ப, அமைப்பு, நிருவாகப் பாதுகாப்புகளைப் பயன்படுத்துகிறோம். நாம் பல்லடுக்குப் பாதுகாப்புகளைப் பயன்படுத்துகிறோம், அதி நவீன தீச்சுவர்ப் பாதுகாப்பு, கட்டாயமாகக் கட்டுப்படுத்தப்பட்ட அணுகல், ஏனைய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்பவற்றை ஒருங்கிணைத்து, எமது தரவுகளின் அங்கீகரிக்கப்படாத பயன்பாட்டை விட்டும் அல்லது மாற்றியமைக்கப்படுவதை விட்டும் பாதுகாக்கிறோம்.

வைத்திருத்தல்

Choreograph ஆனது WPP இன் தரவு தக்கவைத்தலினையும் அதன் தகவல் கொள்கையினையும் பின்பற்றுவதோடு, வியாபாரத்தினை அன்றாடம் நடத்துவதற்கு தேவையாக இல்லாத தரவுகளையும், வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதற்கு தேவையற்றிருக்கும் தரவுகளையும் தக்கவைப்பதில்லை. எங்களது (தரவு) தக்கவைப்பு காலமானது தரவின் வகையினைப் பொறுத்தும், சேவை மற்றும் தரவுகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதில் உள்ள தரவின் சேவை நோக்கத்தினைப் பொறுத்தும், வாடிக்கையாளரின் ஒப்பந்த பொறுப்புக்களுக்கு இணங்கும் அடிப்படையிலும் மாறுபடும். எல்லா சந்தர்ப்பங்களிலும் நாங்கள் உரிய சட்ட நடவடிக்கைகள், ஒழுங்கு முறைகள், ஒப்பந்த பொறுப்புகள் ஆகியவற்றுக்கு இணங்கும் வகையிலும் செயற்படுவோம். அத்துடன் தேவைப்படும் போது தரவுகளை அழிக்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அதனையும் செய்வோம்.

இனி தனிப்பட்ட தரவாக அமைய முடியாத அடையாளம் அழிக்கப்பட்ட அல்லது முழுவதும் விவரங்கள் மறைக்கப்பட்ட தனிப்பட்ட தரவை Choreograph சேமிக்கவும் வைத்திருக்கவும் செய்யலாம். இது ஒரு தனிநபரை இனிமேல் அடையாளம் காட்டாமல் திரட்டப்பட்ட தரவாக இருக்கலாம் மற்றும் இந்தத் தரவுகள் முதன்மையாக ஆழ் நோக்குகள் மற்றும் திட்டமிடல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம்.

தனிப்பட்ட தகவல்களின் சர்வதேச இடமாற்றம்

Choreograph ஒரு உலகளாவிய கம்பனியாக இருப்பதுடன் பல பிராந்தியங்களிலும் நாடுகளிலும் உள்ள சேவை பெறுநர்களுக்கு அதன் சேவைகளை வழங்குகிறது.

சாத்தியமாகுமிடத்து, நுகர்வோரின் இருப்பிடத்தைப் பொறுத்து, எடுத்துக்காட்டாக, ஐரோப்பிய ஒன்றியம் (EMEA, ஐக்கிய இராச்சியம் என்பன), தாய்வான், சிங்கப்பூர், சீனா (APAC இற்கு), ஐக்கிய அமெரிக்கா (வட அமெரிக்கா) ஆகியவற்றில் நாம் தனிப்பட்ட தகவல்களை உண்ணாட்டிற் சேமித்து வைக்கிறோம்.

ஆயிஎனும், பின்வரும் சூழ்நிலைகளில் நாம் இந்த இடங்களுக்கு வெளியே தனிப்பட்ட தகவல்களை அனுப்ப வேண்டியிருக்கலாம்:

  • நாம் எமது தரவுகள் சேமிக்கப்பட்டுள்ள இடங்களைத் தவிர வேறு இடங்களுக்கு எமது சேவை பெறுநர்களுக்கு அல்லது எமது சேவை வழங்குநர்களுக்குத் தகவல்களை அனுப்ப வேண்டிய தேவை ஏற்பட்டால்.
  • எமது பொறியியல் அல்லது ஆதரவுக் குழுக்கள் எமது தொகுதிகளையும் தளமேடைகளையும் கட்டியெழுப்ப, பராமரிக்க, அத்துடன்/அல்லது கண்காணிக்க (தொலை அணுகல் உட்பட) அவை அமைந்துள்ள இருப்பிடத்துக்கு வெளியே தனிப்பட்ட தகவல்களை "அணுகத்" தேவைப்படும்போது.
  • வெவ்வேறு இடங்களை அடிப்படையாக கொண்ட மற்றும் வெவ்வேறு இருப்பிடங்களில் இருந்து தனிப்பட்ட தகவல்களை பெற வேண்டிய நிலையில் உள்ள ஒரு குறுக்கு தொழிற்பாட்டு அல்லது குறுக்கு முகவர் அணி சேவைகளை வழங்குவதற்காக எம்மிடம் இருக்கும் போது.

நாம் இந்த சர்வதேச அனுப்புதல்களைச் செய்யும் போது, அவை பொருந்தக்கூடிய எல்லா உண்ணாட்டுத் தரவுக் காப்பு, அந்தரங்கச் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதை உறுதி செய்கிறோம்.

தொழிற்துறை சங்கங்களுக்கான அங்கத்துவம்

Choreograph என்பது பின்வருவன உட்பட இணைய அடிப்படையிலான விளம்பரத்தின் பின்னணியில் இணையவழி நுகர்வோர் அந்தரங்கம் தொடர்பான கொள்கைகளை நிர்வகிக்கும் தொழிற்றுறைச் சங்கங்களின் ஒரு செயற்படு நிலை உறுப்பினராக உள்ளது: டிஜிட்டல் விளம்பரக் கூட்டணி (DAA), ஐரோப்பிய டிஜிட்டல் விளம்பரக் கூட்டணி ( eDAA), IAB வெளிப்படைத் தன்மை மற்றும் ஒப்புதலுக்கான கட்டமைப்பு (IAB TCF). DAA சுய ஒழுங்குபடுத்தல் கொள்கைகள் அத்துடன் IAB TCF கொள்கைகள் என்பவற்றுக்கு இணக்கமாக Choreograph நடக்கின்றது. நாம் இந்நடத்தைக் கோவைகளும் கொள்கைகளும் நுகர்வோர் அந்தரங்கத்தைப் பாதுகாக்க உதவுவதாக நம்புகிறோம்.

DAA இன் விலகுதல் பொறிமுறை மூலம் உங்களின் தனியுரிமை உரிமைகளை எவ்வாறு பிரயோகிப்பது என்பது பற்றிய மேலதிக தகவல்களைப் பெற நுகர்வோர் விருப்பு வலைவாசலுக்கு செல்க.

 

நுகர்வோர் முன்னுரிமை வலைவாசல்

Choreograph எமது சேவை பெறுநர்களுக்கு அந்தரங்கம் முதன்மையான தீர்வுகளை வழங்கவும் எமது தயாரிப்புகளினதும் சேவைகளினதும் வடிவமைப்பில் அந்தரங்கத்தை உட்பொதிக்கவும் உறுதி பூண்டுள்ளது. நாம் உமது தனிப்பட்ட தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பற்றி எடுக்கும் முடிவுகளுக்கு உமக்கு வழங்கப்பட வேண்டிய கட்டுப்பாட்டை நாம் அறிந்துணர்கிறோம். தனியுரிமை தொடர்பான ஒழுங்குபடுத்தல்களின் கீழ் உமது உரிமைகளைப் பயன்படுத்துவதற்கான எளிய, வெளிப்படையான செயன்முறையை உங்களுக்கு வழங்குவதற்காக இந்த விருப்ப மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

நாம் தகவலறிந்த முடிவெடுப்பதற்காக முடிந்த வரை உமக்குத் தகவல்களை வழங்க விரும்புகிறோம். இவ்வலைவாசலின் மூலம் உமது உரிமைகளைப் பயன்படுத்தப் பல்வேறு வழிகள் உள்ளன. வெவ்வேறு முறைகள் நீர் வசிக்கும் நாட்டையும் உம்மைப் பற்றி நாம் வைத்திருக்கும் தரவு வகையையும் பொறுத்து இருக்கும்.

நாம் எமது சேவை பெறுநர்களுக்கு வழங்கும் சேவைகளின் தன்மையின் காரணமாக, உமது இணையவழித் தரவுகளையும் இணையமில் வழித் தரவுகளையும் வித்தியாசமாக கையாள்கிறோம். எமது சேவைகளைப் பற்றி மேலும் தகவல்களுக்காக, அந்தரங்கக் கொள்கையின் எமது சேவைகள் எனும் பகுதியை தயவு செய்து வாசிக்கவும். இந்த நுகர்வோர் தெரிவு வலைவாசல் இணையமில் வழி, இணையவழி தரவுகள் தொடர்பான உமது உரிமைகளைப் பயன்படுத்தப் பயன்படுத்தப்படலாம். நாம் உமது கோரிக்கைக்கு கூடிய விரைவில், ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், உமது நாட்டில் உள்ள அந்தரங்கம் தொடர்பான சட்டங்களின் கீழ் தேவைப்படும் காலக்கெடுவுக்குள் பதிலளிக்க முயல்வோம்.

உங்களின் தகவல்கள்

உங்களது தனிப்பட்ட தகவல்களை நாங்கள் எவ்வாறு உபயோகம் செய்கின்றோம் என்பதனைக் கட்டுப்படுத்த நாங்கள் பயனர்-இலகு இணைய வாசல் ஒன்றை உருவாக்கியிருக்கின்றோம்  இதில்உங்களின் இணையவழி அடையாளங்கள், கருவி மற்றும் இணைய உலாவி பற்றிய தகவல்கள், இணையவழிச் செயற்பாட்டுத் தகவல்கள், அத்துடன் அமைவிடத் தரவுகள் இந்த வகை தரவுகளின் விபரங்களைப் பார்வையிட x பிரிவைப் நோக்கவும்) உள்ளடங்கலான தனிப்பட்ட தரவுகள் அத்துடன் உங்களின் பெயர், தொலைபேசி இலக்கம் மற்றும் அஞ்சல் முகவரி போன்ற தனிப்பட்ட விபரங்கள் ஆகிய இருவகைத் தரவுகளும் இதில் உள்ளடங்குகின்றன.

நாங்கள் எல்லா சேவைகளினையும் எல்லாப் பிராந்தியங்களிலும் வழங்காத காரணத்தினால், நீங்கள் இருக்கும் இருப்பிடத்தினைப் பொருட்டு நாங்கள் சேகரிக்கும் தனிப்பட்ட தரவுகள் மாற்றம் அடையலாம்.   நாம் உங்களைப் பற்றி வைத்திருக்கும் இணையமில் வழித் தரவுகளையும் நீங்கள் உமது இணையமில் வழித் தரவுகளை எவ்வாறு முகாமைத்துவம் செய்யலாம் என்பதையும் பற்றி மேலும் அறிய, இங்கே சொடுக்குக.  உங்களது தனிப்பட்ட டிஜிட்டல் தரவுகளை பயன்படுத்துவது தொடர்பில் எங்களது இணைய நுழைவாயில் மூலம் நீங்கள் மேற்கொள்ளும் தெரிவுகள், நீங்கள் பாவிக்கும் விஷேடமான இணைய உலாவிக்கும், சாதனத்திற்கும் மாத்திரமே பொருந்தும். உங்களது உரிமைகளை உபயோகிக்கும் ஏனைய முறைகள் குறித்து கண்டறிய கீழே நோக்கவும்.

நீங்கள் சீனாவில் வசிப்பவராக இருந்தால் உங்கள் தரவுகளையும் முகாமைத்தும் செய்வதற்கும், உரிமைகளை உபயோகம் செய்வதற்கும் இந்த மின்னஞ்சலில் தொடர்பு கொள்க privacy@choreograph.com

உங்களை அடையாளம் காண, உங்களது தரவுகளை எவ்வாறு நாங்கள் பயன்படுத்துகின்றோம்

தரவை உங்களுக்கு விடுவிக்க முன்னர், உங்களது அடையாளத்தினை உறுதிப்படுத்துமாறு நாங்கள் கேட்கலாம், இதனை நாங்கள் செய்வதற்கான காரணம் உங்களது தகவல்களை உங்களிடம் மாத்திரம் வழங்குவதற்கும், அதனை சட்ட விரோதமான மூன்றாம் தரப்பு அணுகலில் இருந்து பாதுகாப்பதற்குமாகும். நாம் உமது அடையாளத்தைச் சரிபார்ப்பதைத் தவிர, எமது சேவைகளில் அல்லது வேறு எந்த நோக்கத்துக்காகவும் உமது அடையாளத்தைப் பகிரவோ அல்லது பயன்படுத்தவோ மாட்டோம்.

உங்களின் உரிமைகளை பிரயோகிப்பதற்கான ஏனைய வழிகள்

உலாவிச் சூழல்களில் பின்வரும் முறைகளின் மூலம் நீர் ஞாபகிகளை மறுக்கலாம் அல்லது அகற்றலாம்:

  • உமது உலாவி அமைப்புகளில் வழங்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், ஞாபகிகளை மறுக்க அல்லது அகற்ற உமது உலாவி அமைப்புகளைச் சரிக்கட்டுதல். இதை எப்படி செய்வது என்பதைப் பற்றி மேலும் தகவல்கள் இங்கேகிடைக்கப் பெறுகின்றன.
  • வலைத்தள உரிமையாளரின் மட்டத்தில் ஞாபகி அமைப்புகளைச் சரிக்கட்டுதல். இந்த அமைப்புத் தெரிவுகள் வலைத்தள உரிமையாளருக்கேற்ப மாறுபடலாம்.
  • டிஜிட்டல் விளம்பரக் கூட்டணி (DAA) இன் இணையச் சூழல்களுக்கான “YourAdChoices” ஊடாக விருப்பு அடிப்படையில் அமைந்த விளம்பரங்களை பெறுவதில் இருந்து நீங்கும் வழி இங்கே கிடைக்கின்றது:
    - ஐக்கிய அமெரிக்காவுக்கு - https://optout.aboutads.info/?c=2&lang=EN
    - கனடாவுக்கு - https://youradchoices.ca/en/tools
    - ஐரோப்பா மற்றும் ஐக்கிய இராச்சியத்துக்கு - https://youronlinechoices.com/ (நீங்கள் எங்கே உள்ளீர்கள் என்பதை தெரிவு செய்ததன் பின்னர் Your ad choices” என்ற இணைப்பை சொடுக்குவதன் மூலமாக)

பின்வரும் முறைகளின் மூலம் உமது விளம்பர அடையாளத்துடன் இணைக்கப்பட்ட கைப்பேசி, மேலுக்கு மேல் (OTT) தொலைபேசிச் சாதனச் செயலிச் சூழல்களில் நீர் விளம்பரக் கண்காணிப்புக்கு வரம்பிடலாம்.

  • உமது கைப்பேசிச் சாதனத்தில், அத்துடன்/அல்லது உமது OTT தொலைக்காட்சிச் சாதனத்திலுள்ள அந்தரங்க அமைப்புக்குச் சென்று, பொருந்தக்கூடிய விளம்பர அடையாளத்தின் வழியாக ஆர்வ அடிப்படையிலான விளம்பரங்களை நிறுத்த, “விளம்பரக் கண்காணிப்பை வரம்பிடு” என்பதைத் தெரிவு செய்க. குறிப்பு: உமது சாதனங்களின் வழியாக ஆர்வத்தை அடிப்படையாகக் கொண்ட விளம்பரங்களைத் தவிர்ப்பதற்கான மிகவும் பயனுள்ள, அதி நவீன முறைகளுக்காக உமது சாதன உற்பத்தியாளர்களால் வழங்கப்பட்ட வழிமுறைகளைப் பார்க்க.
  • டிஜிட்டல் விளம்பரக் கூட்டணி (DAA) இன் செயலிச் சூழல்களுக்கான “YourAdChoices” ஊடாக விருப்பு அடிப்படையில் அமைந்த விளம்பரங்களை பெறுவதில் இருந்து நீங்கும் வழி இங்கே கிடைக்கின்றது:
    - ஐக்கிய அமெரிக்காவுக்கு - https://youradchoices.com/control
    - கனடாவுக்கு - https://youradchoices.ca/en/tools

ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய பொருளாதார பிரதேசம் மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள தனி நபர்களின் தனியுரிமை உரிமைகள்

உங்களுக்கு அணுகுவதற்கும், புதுப்பிப்பதற்கும், மாற்றுவதற்கும், நீக்குவதற்கும், பயன்பாட்டை மட்டுப்படுத்துவதற்கும், அல்லது உங்களின் தனிப்பட்ட தகவல்களின் பிரதி ஒன்றை இலகுவாக வாசிக்கும் வடிவமொன்றில் பெறவும் உங்களுக்கு உரிமை உள்ளது. சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில், Choreograph இனை நீங்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களை மூன்றாம் தரப்பினருக்கு பரிமாற்றுமாறு கூற முடியும், அத்துடன் இதனை சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்கு பயன்படுத்துவதனை தடுக்கும் உரிமையும் உங்களுக்கு உள்ளது. உங்களது சம்மதத்தின் அடிப்படையில் உங்களது சொந்த தகவல்களை செயன்முறைக்கு உட்படுத்தும் சந்தர்ப்பத்தில், அந்த சம்மதத்தினை எந்த நேரத்திலும் திரும்பப் பெறுகின்ற உரிமையும் உங்களுக்கு உண்டு. உங்களுடைய தகவல்களை நாங்கள் செயன்முறைக்கு உட்படுத்தும் சட்ட ரீதியான முறையில், நீங்கள் சம்மதத்தினை திரும்ப பெறுவதற்கான கோரிக்கையினை முன்வைக்க முன் பெறப்பட்ட தகவல்களைப் பயன்படுத்துவதில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என்பதை தயவு செய்து கவனிக்கவும்.

இந்த உரிமைகளில் எதையாவது நீங்கள் பிரயோகிக்க விரும்பினால், தயவு செய்து எமது நுகர்வோர் விருப்பு வலைவாசலை பயன்படுத்தவும் அல்லது பின்வரும் மின்னஞ்சல் முகவரி ஊடாக எமக்கு மின்னஞ்சல் அனுப்பவும் privacy@choreograph.com

நாம் உமது தனிப்பட்ட தகவல்களை நாம் எப்படிக் கையாண்டோம் என்பதைப் பற்றி நீர் மகிழாவிடின், மேற்பார்வை அதிகாரசபையிடம் முறைப்பாடு செய்யவும் உமக்கு உரிமையுண்டு.

கலிபோர்னியாவில் உள்ள தனி நபர்களின் தனியுரிமை உரிமைகள்

இங்கே நோக்கவும்

உலகளாவிய பயனாளர்களின் தனியுரிமை உரிமைகள்

உங்களின் பிராந்தியத்தைம் யாதாயிருப்பினும், எதிர்காலச் செயலாக்கத்திலிருந்து விலகவும், எமது நுகர்வோர் விருப்ப வலைவாசலின் மூலம் உமது தனிப்பட்ட தகவல்களை நீக்கக் கோரலாம். இந்த உரிமைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பற்றி உங்களிடம் எவையேனும் கேள்விகள் இருந்தால் privacy@choreograph.com என்ற மின்னஞ்சல் ஊடாக எம்மைத் தொடர்பு கொள்ளவும்.

எவ்வாறு புகாரளிப்பது

உங்களுக்கு ஏதாவது முறைப்பாடுகள் இருந்தால் அல்லது எங்களை தொடர்பு கொள்ள விரும்பினால் எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள் என்ற பிரிவை தயவு செய்து பயன்படுத்தவும் அத்துடன் உங்களின் தனிப்பட்ட தகவல்களை நாம் எவ்வாறு சேகரிக்கின்றோம் மற்றும் பயன்படுத்துகின்றோம் என்பது பற்றி உங்களுக்கு ஏதாவது புகார்கள் அல்லது கவலைகள் இருந்தால் அவற்றை தீர்ப்பதற்கு எம்மால் முடிந்த வரை சிறப்பாக செயற்படுவோம்

நீர் நாம் எக்காரணத்துக்காகவேனும் உமது கவலைகளை போதுமான அளவில் நிவர்த்தி செய்யவில்லையெனக் கருதினால், நீங்கள் உங்களது நியாயாதிக்கத்திலுள்ள பொருந்தக்கூடிய தரவுக் காப்பு அதிகார சபையை அல்லது மேற்பார்வை அதிகாரசபையைத் தொடர்பு கொண்டு ஒரு முறையான முறைப்பாட்டைச் செய்யலாம்.

எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்

நாம் இந்தத் தனியுரிமைக் கொள்கையில் முடிந்த வரை தெளிவாக இருக்க முயன்றுள்ளோம், ஆனால் உமக்கு விளங்காத ஏதேனும் இருந்தால் அல்லது மேலதிகத் தகவல் தேவைப்பட்டால், privacy@choreograph.com ஊடாக எம்மைத் தயவு செய்து தொடர்பு கொள்ளவும், அல்லது நுகர்வோர் விருப்பு வலைவாசல் ஊடாக உங்களின் உரிமையை பிரயோகிக்க முடியும்.

ஐரோப்பிய பொருளாதாரப் பிரதேசம் மற்றும் சுவிட்சர்லாந்து பிரதேசங்களில் Choreograph சேகரிக்கும் தரவுக்கு பொறுப்பான Choreograph சட்ட அமைப்பாக Choreograph Limited காணப்படுகின்றது. ஐரோப்பிய பொருளாதாரப் பிரதேசம் மற்றும் சுவிட்சர்லாந்து பிரதேசங்களுக்கு வெளியே பொறுப்பான சட்ட ரீதியான அமைப்பு Choreograph LLC ஆகும். நீங்கள் ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதியில் அல்லது சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஒருவராக இருந்தால், எமது DPO ஐ dpo@Choreograph.com இல் தொடர்பு கொள்ளலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

இந்தக் கொள்கையைப் பற்றி உமக்கு எவையேனும் கேள்விகள், கருத்துகள் அல்லது கவலைகள் இருந்தால், நீங்கள் மின்னஞ்சல் அல்லது அஞ்சல் மூலம் எம்மைத் தொடர்பு கொள்ளலாம்:

ஐரோப்பா:
Choreograph Limited
DPO@choreograph.com
Choreograph, சீ கென்டைனர்ஸ், 18, மேல் தளம், லன்டன், SE1 9PT - கவனம் செலுத்துபவர்: தரவுக் காப்பு அலுவலர்

ஐரோப்பாவுக்கு வெளியே:
Choreograph LLC
Privacy@choreograph.com
Choreograph, 3 உலக வர்த்தக மையம், 175 கிறீன்விச் வீதி, நியூ யோர்க், NY, 10007, ஐக்கிய அமெரிக்கா - கவனம் செலுத்துனர்: தனியுரிமை தொடர்பான பணிப்பாளர்

கொள்கையில் ஏற்படும் மாற்றங்கள்

தனியுரிமைச் சட்டங்களினதும் ஒழுங்குறுத்தல்களினதும் எண்மானத் தொழினுட்பங்களினதும் எமது வணிகத்தினதும் மாறும் இயல்பின் காரணமாக நாம் இந்த அந்தரங்கக் கொள்கையைக் காலத்துக்குக் காலம் மாற்றியமைக்கலாம் என்பதைக் கவனிக்க. இந்த தனியுரிமைக் கொள்கையை அவ்வப்போது மீளாய்வு செய்து எவையேனும் மாற்றங்களைப் பற்றி அறிந்து கொள்க (நீர் மாற்றங்கள் எப்போது செய்யப்பட்டுள்ளன என்பதை அறிய உதவியாக நாம் பக்கத்தின் மேலே உள்ள திகதியை இற்றை செய்வோம்).